ஹங்கேரியில் அரசுமுறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, மேஜர் நெம்செட் செய்தித்தாளில் சீனா-ஹங்கேரி உறவை “தங்கப் பாதையில்” வழிநடத்துவது என்ற கட்டுரையைச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 8ஆம் நாள் வெளியிட்டார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், தற்போது சீனாவும் ஹங்கேரியும் தங்கள் வளர்ச்சியின் முக்கியமான காலகட்டத்தில் உள்ளன.
இப்பயணத்தின் மூலம், ஹங்கேரியுடன் பாரம்பரிய நட்பைப் பரவல் செய்து, ஒன்றுக்கு ஒன்று ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்குக் கூட்டுறவைப் புதிய நிலைக்கு முன்னேற்றுவிக்க விரும்புகின்றேன் என்றார்.