ஐ.நா.வில் சீனாவின் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது ஏன்?

ஐ.நா.வில் சீனாவின் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது ஏன்?

ஜுலை 4ஆம் நாளன்று, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத்தொடரில், 4ஆவது உலகளாவிய கால அளவிலான மீளாய்வை சீனா நிறைவேற்றுவது பற்றிய அறிக்கை அங்கீகரிக்கப்பட்டது.

அப்போது, பல நாடுகளின் பிரதிநிதிகள் சீன பிரதிநிதிக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 120க்கும் அதிகமான நாடுகள், மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டில் சீனாவின் முயற்சிகளைப் பாராட்டியுள்ளன.


உலகளாவிய கால அளவிலான மீளாய்வு என்பது, ஐ.நா.வின் கீழ் பல்வேறு நாடுகள் மனித உரிமைகள் குறித்து சமத்துவமான நேர்மையான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கான முக்கிய அரங்கமாகும்.

2009, 2013 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் சீனா மூன்று முறையாக அத்தகைய மீளாய்வில் கலந்து கொண்டது. 3ஆவது சுற்று மீளாய்வு முதல், மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக, சீனா சட்ட விதிகளைத் திருத்தம் செய்து புதிய சட்டங்களை வகுத்து வெளியிட்டது. மேலும், மனித உரிமைகளை உத்தரவாதம் செய்யும் விதம், 30 புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சீனா அறிவித்தது.

இந்நிலையில், சீனா திறப்பு மற்றும் நேர்மையுடன் இருப்பதாகவும் செயல்திறன் மிக்கது என்றும் பல்வேறு தரப்புகள் கருதுகின்றன.
இந்த ஒருமித்த கருத்து எங்கிருந்து உருவானது என்ற கேள்வி எழுந்துள்ளது. இநத் கேள்விக்கு உண்மையே பதில் தருகிறது.

கடந்த பல ஆண்டுகளில், வாழ்வுரிமை மற்றும் வளர்ச்சியுரிமை ஆகியவற்றை அடிப்படை மனித உரிமைகளில் முதன்மையாக வைப்பது என்ற கொள்கையை சீனா பின்பற்றி வருகிறது. வாழ்வு என்பது, அனைத்து மனித உரிமைகளையும் அனுபவிப்பதற்கான அடிப்படையாகும். மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது மிக பெரிய மனித உரிமையாகும் என்று சீனா முன்மொழிந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author