தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குறிப்பாக தென்காசி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிகக் கனமழை பதிவாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையினால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க அவ்வப்போது தடைகளும் விதிக்கப்படுகின்றன.
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் பரவலாக மழை: தென்காசி, நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை
