அதிமுகவில் இருந்து தவெகவில் இணைபவர்கள் குறித்து வெளியே சொன்னால் பிரச்னை ஏற்படும் என்கிற செங்கோட்டையனின் சூசக பேச்சு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தவெக நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஒரு புதிய இயக்கம் ஆட்சிக்கு வர வேண்டுமென மக்கள் நினைப்பதாகவும், 2026ல் மக்கள் சக்தியால் ஆட்சி பீடத்தில் அமரும் காலம் உருவாகும் என்றும் கூறினார்.
மேலும், 2026ல் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமரப் பாடுபடுவேன் எனக்கூறிய செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து வேறு யாரும் சேர்வார்களா? என்ற கேள்விக்கு, அதை பற்றிச் சொன்னால் பிரச்னை உருவாகும் எனப் பதிலளித்தார்.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையன் காரில் தவெக கொடி பொறுத்தப்பட்டுள்ளது. இத்தனை நாட்கள் அதிமுக கொடி பொறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது தவெக கொடி பொறுத்தப்பட்டுள்ளது.
