பலுசிஸ்தானில் சீன ராணுவம்? இந்தியாவிற்கு பெரும் ஆபத்து என பலுச் தலைவர் எச்சரிக்கை  

Estimated read time 0 min read

பலுசிஸ்தான் பகுதியில் இன்னும் சில மாதங்களில் சீனா தனது ராணுவ படைகளை களம் இறக்க வாய்ப்புள்ளதாகவும், இது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் பலுச் தலைவர் மிர் யார் பலுச் எச்சரித்துள்ளார்.
பலுசிஸ்தான் குடியரசின் பிரதிநிதியான மிர் யார் பலுச், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்..ஜெய்சங்கருக்கு ஜனவரி 1 அன்று ஒரு அவசர கடிதம் எழுதியுள்ளார்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையும், பலுச் சுதந்திர படைகளை ஒடுக்க சீனா தனது ராணுவத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளதையும் அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலுசிஸ்தான் மண்ணில் சீன ராணுவ வீரர்களின் கால்தடங்கள் பதிவது, பலுச் மக்களுக்கும் இந்தியாவிற்கும் கற்பனை செய்ய முடியாத ஆபத்துகளை விளைவிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

You May Also Like

More From Author