அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள விரிவான உலகளாவிய வரிகளுக்கு எதிரான வழக்கில், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) எவ்விதத் தீர்ப்பையும் வழங்காமல் தள்ளிவைத்துள்ளது.
2025 ஜனவரியில் அதிபராகப் பொறுப்பேற்றது முதல், டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகள் மீது வரிகளை விதித்து வருகிறார்.
இந்த அதிரடி நடவடிக்கைகள் அதிபரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதா என்பதைச் சோதிக்கும் முக்கிய வழக்காக இது பார்க்கப்படுகிறது.
டிரம்பின் உலகளாவிய வரி விதிப்பு; அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தள்ளிவைப்பு
