2025ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் ₹500 கோடி வசூலித்த மூன்றாவது படமாக உருவெடுத்துள்ளது ரஜினிகாந்தின் ‘கூலி’.
‘கூலி’யின் வசூல், இரண்டாவது வார இறுதிக்குப் பிறகு கணிசமாகக் குறைந்த போதிலும், படத்திற்கு CBFC தந்துள்ள A செர்டிபிகேட் பின்னணியிலும் ₹500 கோடி வசூலைக் கடக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இது ரஜினிகாந்தின் முந்தைய பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்துள்ளது. எனினும் இது அவருக்கு புதிதல்ல.
ரூ.500 கோடி வசூலை தாண்டிய 3வது ரஜினி படம் இது.
இதற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து, 2018இல் வெளியான 2.0 திரைப்படம் ₹666-800 வரை வசூலித்தது. அடுத்ததாக, நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023இல் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரூ.600 க்கும் மேல் வசூல் செய்தது.
‘கூலி’ உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் Rs. 500 கோடியைத் தாண்டியது
