தமிழக அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது.
பொதுவாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வார இறுதியில் நடைபெறும் இப்பணி, இந்த முறை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே தொடங்கப்படுகிறது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 21 லட்சம் பயனாளிகள் தங்கள் இல்லங்களிலேயே பொருட்களைப் பெற்று பயன் பெற உள்ளனர்.
