Post Views: 8
ஏழை பெண்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு, மூவலுார் ராமாமிர்தம் நினைவு திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மணமகளுக்கு, 25,000 ரூபாய் நிதியுதவியும், எட்டு கிராம் தங்க நாணயமும் வழங்கியது. பட்டம் பெற்ற மணமகளுக்கு, 50,000 ரூபாயும், எட்டு கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.
இத்திட்டம், சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது, பல்வேறு திட்டங்களின் கீழ், எட்டு கிராம் தங்கமும், நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் ,திருமணத்திற்கு தயாராக உள்ள பெண்களை வைத்திருக்கும் குறைந்த வருமானத்தையுடைய மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:தங்கம் விலை ஏறியதால், திருமண வயதில் உள்ள ஏழை பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுடைய நிலைமை குறித்து உளவு துறையின் அறிக்கைகள் மூலம் அரசு விழிப்புணர்வு பெற்றுள்ளது. பெண்களின் ஆதரவை பெறும் நோக்கத்துடன், அரசு தற்போது புதிய நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் நான்கு திருமண நிதி உதவி திட்டங்களுக்கு 5,460 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் போல உள்ளது பயனாளிகளுக்கு வழங்கு 22 கேரட் 8 கிராம் தங்க நாணயங்கள் சுமார் 1 45 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரி உள்ளது.
1. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம்
உதவி தொகை: ₹15,000 , ₹10,000 (தேசிய சேமிப்புச் சான்றிதழ்)
தங்கம்: 8 கிராம் 22 காரட் நாணயம்
தகுதி: வருமானம்/கல்வித் தகுதி இல்லை
பட்டம்/பட்டயம் பெற்றோர்: ₹50,000 (₹30,000 மின்னணு + ₹20,000 சான்றிதழ்) + 8 கிராம் தங்கம்
2. ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம்
உதவி தொகை: ₹25,000 + 8 கிராம் தங்கம்
வருமான வரம்பு: குடும்ப வருமானம் ஆண்டு ₹1,20,000 க்கு மிகாமல் இருத்தல் அவசியம்
பட்டப்படிப்பு பெற்றோர்: ₹50,000 + 8 கிராம் தங்கம்
3. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம்
உதவி தொகை: ₹25,000 + 8 கிராம் தங்கம்
தகுதி: வருமானம்/கல்வித் தகுதி இல்லை
பட்டப்படிப்பு பெற்றோர்: ₹50,000 + 8 கிராம் தங்கம்
4. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி
உதவி தொகை: ₹15,000 (மின்னணு) + ₹10,000 (சான்றிதழ்) + 8 கிராம் தங்கம்
பட்டம்/பட்டயம் பெற்றோர்: ₹30,000 (மின்னணு) + ₹20,000 (சான்றிதழ்) + 8 கிராம் தங்கம்
தகுதி: வருமான வரம்பு இல்லை
Please follow and like us: