பிரிக்ஸ் அமைப்பின் 15வது உச்சி மாநாடு ஆக்ஸ்ட் 24ம் நாள் தென்னாப்பிரிக்க ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அதில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், ஜோஹன்னஸ்பர்கில் பிரிக்ஸ் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களைக் கலந்தாலோசித்து, மகிழ்ச்சியடைகிறேன். பிரிக்ஸ் நாடுகள், சொந்த வளர்ச்சி பாதையைத் தற்சார்பாகத் தேர்ந்தெடுத்து, வளர்ச்சி உரிமையைக் கூட்டாகப் பேணிக்காத்து, நவீனமயமானத்தை நோக்கி நடைபோடுகின்றன. பிரிக்ஸ் நாடுகள், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உயர்தர கூட்டாளியுறவை வளர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பொருளாதார வர்த்தகம் மற்றும் நிதித் துறை ஒத்துழைப்பை ஆழமாக்கி, பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும். அரசியல் பாதுகாப்புக்கான ஒத்துழைப்பை விரிவாக்கி, அமைதியைப் பேணிக்காக்க வேண்டும்.
மானிடவியல் தொடர்பை அதிகரித்து, நாகரிகப் பரிமாற்றத்தை முன்னேற்ற வேண்டும். நேர்மை மற்றும் நீதியில் ஊன்றி நிற்று, உலக மேலாண்மையை முழுமையாக்க வேண்டும். பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூக சிந்தனையுடன், நெடுநோக்கு கூட்டாளியுறவை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை ஆழமாக்கி, பிரிக்ஸ் பொறுப்புடன் பொது சவால்களைச் சமாளித்து, அருமையான எதிர்காலத்தைத் திறந்து வைத்து, நவீனமயமானம் நோக்கிக் கூட்டாக முன்னேற சீனா விரும்புகிறது என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.