“இந்தியாவில் இதெல்லாம் கனவு தான்” சிங்கப்பூரில் நள்ளிரவு 3 மணி.. தனியாகச் சென்ற இந்தியப் பெண்..வைரலாகும் மிரட்டல் வீடியோ..!! 

Estimated read time 1 min read

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியப் பெண்ணான கிருத்திகா ஜெயின், நள்ளிரவு 3 மணிக்கு அந்த நாட்டுச் சாலையில் எவ்வித பயமும் இன்றி தனியாக நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது பெண்களுக்கு இருக்கும் அந்தப் பதற்றமோ அல்லது பின்னால் யாராவது வருகிறார்களா என்று திரும்பிப் பார்க்கும் தேவையோ தனக்கு அங்கு இல்லை என்று அவர் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

“இந்தியாவில் என்னால் இப்படிச் செய்ய முடியாது, ஆனால் சிங்கப்பூரில் இது ஒரு சாதாரண விஷயம். இங்குப் பாதுகாப்பு என்பது ஆடம்பரம் அல்ல, அது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது” என்று அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், குறிப்பாகப் பெண்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. “பாதுகாப்பாக உணர்வது என்பது ஒரு அடிப்படை உரிமை, அதைக் கொண்டாடும் நிலையில் நாம் இருப்பது வருத்தமாக இருக்கிறது” என்று பல பெண்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Kritika Jain (@theroamingtoes)

“உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை விட, மன அமைதியுடன் ஒரு பெண் சாலையில் நடப்பதே உண்மையான முன்னேற்றம் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. இந்தியாவிலும் என்றாவது ஒரு நாள் இது போன்ற பாதுகாப்பான சூழல் உருவாகும் என்ற நம்பிக்கையுடன் பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author