மீண்டும் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு  

Estimated read time 0 min read

இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத வகையில் சரிந்து 90 ரூபாயைக் கடந்துள்ளது. 2026 தொடக்கத்திலேயே ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக திங்கட்கிழமை (ஜனவரி 5) வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 90.24 ஆகக் குறைந்திருப்பது இறக்குமதியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடையே கவலையை உருவாக்கியுள்ளது.
இந்தத் திடீர் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகப் புவிசார் அரசியல் பதற்றங்கள் பார்க்கப்படுகின்றன.
வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கைகள் காரணமாக உலகளவில் டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது.
பாதுகாப்பான முதலீடாக டாலர் கருதப்படுவதால், முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து தங்கள் நிதியைத் திரும்பப் பெற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 18 பில்லியன் டாலர் மதிப்பிலான வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளது.

You May Also Like

More From Author