வெனிசுலாவின் தற்காலிகத் தலைமை, அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படாவிட்டால், அந்த நாட்டின் மீது ‘இரண்டாம் கட்ட’ ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிபர் நிக்கோலஸ் மதுரோவைச் சிறைபிடித்த “ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்” (Operation Absolute Resolve) என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து டிரம்ப் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
“நாங்கள் இரண்டாம் கட்டத் தாக்குதலுக்குத் தயாராக இருந்தோம், ஆனால் தற்காலிகமாக அதை நிறுத்தி வைத்துள்ளோம். வெனிசுலா அரசு சரியாக நடந்து கொள்ளாவிட்டால், மீண்டும் ஒரு தாக்குதலை நடத்துவோம்,” என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வெனிசுலா அடங்க மறுத்தால் இரண்டாம் கட்டத் தாக்குதல்: அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
