2025 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் மூன் இன்று அக்டோபர் 6 அன்று இரவு வானத்தை அலங்கரிக்கும்.இந்த முழு நிலவு வழக்கத்தை விட மிக கிட்டத்தட்ட 14% பெரியதாகவும், 30% அதிகப் பிரகாசத்துடனும் வானில் ஒரு ராட்சசப் பந்து போலத் காட்சியளிக்கும்.
பூமிக்கு அருகில் நிலவு வரும் போது, வழக்கமாக அளவில் தெரியும் நிலவை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் தெரியும். இது ‘சூப்பர் மூன்’ என அழைக்கப்படுகிறது.நிலவு முழு பௌர்ணமியாக இருக்கும் அதே நேரத்தில், அதன் சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக மிக அருகில் வரும் ஒரு தற்செயல் நிகழ்வு ஏற்படும் போதுதான் இது ‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது.
முழு நிலவின் ஒளி விவசாயிகள் இருட்டிய பிறகும் பயிர்களை சேகரிக்க பேருதவியாக இருக்கும். விவசாய நாட்டுப்புற கதைகளில் இருந்து இதன் புனைப்பெயர் வந்தது. இது தான் அறுவடை முழு நிலவு என்று சொல்வதற்கு காரணம்.
இந்த அற்புத சூப்பர் மூனைக் காண உங்களுக்கு விலையுயர்ந்த டெலஸ்கோப் எதுவும் தேவையில்லை. வானம் இருட்டியதும் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்: வெளியே சென்று வானத்தைப் பாருங்கள். பவுர்ணமி தினத்தில் ‘சூப்பர் மூன்’ ஏற்படும். ஆனால் அனைத்து பவுர்ணமியிலும் ‘சூப்பர் மூன்’ நிகழ்வதில்லை. அடுத்த ‘சூப்பர் மூன்’ 2025 நவ. 7, டிச. 4ல் நிகழ்கிறது. 1979ல் வானியல் நிபுணர் ரிச்சர்டு நுாலே ‘சூப்பர் மூன்’ பெயரை அறிமுகப்படுத்தினார்.