விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டு வட துருவ ஒளி எனப்படும் அரோரா பொரியாலிஸ் மிகவும் பிரகாசமாகவும், அடிக்கடித் தோன்றக்கூடியதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரியன் சுமார் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது காந்தப் புலத்தின் செயல்பாடுகளில் மாற்றத்தைச் சந்திக்கும்.
இதற்கு சோலார் சைக்கிள் என்று பெயர். தற்போது நாம் சோலார் சைக்கிள் 25இல் இருக்கிறோம். சூரியனின் செயல்பாடு அதன் உச்சக்கட்டத்தை அடையும் காலமே இது.
விஞ்ஞானிகளின் கணிப்புப்படி, இந்த உச்சக்கட்டம் 2024 பிற்பகுதியில் தொடங்கி 2026 வரை நீடிக்கும்.
இந்தச் சமயத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் சூரியக் காற்று மற்றும் சூரிய எரிமலை வெடிப்புகள் அதிகமாக இருக்கும்.
இவை பூமியின் காந்தப்புலத்துடன் மோதும்போது வானத்தில் வண்ணமயமான ஒளித் தோற்றங்களை உருவாக்குகின்றன.
2026இல் மிகப்பிரகாசமாகத் தெரியப்போகும் வட துருவ ஒளி; ஏன் தெரியுமா?
