சீன-ஆப்பிரிக்க மானுடப் பண்பாட்டுப் பரிமாற்ற ஆண்டு எனும் நடவடிக்கையின் துவக்க விழா

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஜனவரி 7ஆம் நாள் முதல் 12ஆம் நாள் வரை, அழைப்பின் பேரில், எத்தியோப்பியா, சோமாலியா, தான்சானிய, லெசோத்தோ ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் 7ஆம் நாள் வெளியிட்ட குறிப்பில், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமை அலுவலகத்தில் சீன-ஆப்பிரிக்க மானுடப் பண்பாட்டு பரிமாற்ற ஆண்டு எனும் நடவடிக்கையின் துவக்க விழாவிலும் அவர் கலந்துகொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 36 ஆண்டுகளில் சீன வெளியுறவு அமைச்சர்கள் புதிய ஆண்டில் தங்களது முதல் வெளிநாட்டுப் பயணமாக ஆப்பிரிக்காவைத் தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author