சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ ஜனவரி 6ஆம் நாளரிவு அழைப்பையேற்று, பின்லாந்து வெளியுறவு அமைச்சர் வால்டோனனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், கடந்த ஆண்டில் இரு நாட்டுறவில் புதிய வளர்ச்சி காணப்பட்டு பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளில் புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. 15ஆவது ஐந்தாண்டு திட்டம் துவங்கிய இவ்வாண்டில், பின்லாந்துடன் இணைந்து வளர்ச்சிக்கான நெடுநோக்கு தொடர்பை வலுப்டுத்தி எரியாற்றல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி வளர்ச்சி மற்றும் செழுமையைக் கூட்டாக நனவாக்கச் சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.
ஒரே சீனா எனும் கொள்கையைப் பின்பற்றுவதில் பின்லாந்து ஊன்றி நிற்கிறது என்றும், சீன தரப்புடன் உயர் நிலை பரிமாற்றத்தை நெருக்கமாக்கிப் பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்க விரும்புகிறது என்றும் வால்டோன் கூறினார். மேலும், காலநிலை, எரியாற்றல் உள்ளிட்ட துறைகளில் ஐரோப்பாவும் சீனாவும் முக்கிய ஒத்துழைப்புக் கூட்டாளி ஆகும். இரு தரப்புகளுக்கிடையே பயனுள்ள உறவை நிலைப்படுத்துவது மிக முக்கியமானதாக இருக்கும். இதற்கு பின்லாந்து ஆக்கப்பூர்வமான பங்கு ஆற்ற விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.
