அடிப்படை ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு 7 சதவீதத்தைத் தாண்டிய சீனா

Estimated read time 0 min read

சீனாவின் இரு கூட்டத்தொடர்களில் சீன அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் யின் ஹெஜுன் வெளியிட்ட தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் அடிப்படை ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு கிட்டத்தட்ட 28 ஆயிரம் கோடி யுவானாகும். இது சமூகத்தின் மொத்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டில் முதன்முறையாக 7 சதவீதத்தைத் தாண்டி, முன்பு காணாத புதிய சாதனையைப் படைத்துள்ளது. மேலும், புதிய கண்டுபிடிப்பு மற்றும் முக்கிய தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை வலுப்படுத்தவும், அடிப்படை ஆராய்ச்சிக்கான ஒதுக்கீட்டை தொடர்ந்து அதிகரிக்கவும் வேண்டும் என்று அரசு பணியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுத்துள்ளது.

15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில், குவாண்டம் தகவல், மூளை அறிவியல், உயிர் ஆரோக்கியம், விண்வெளி மற்றும் வான்வெளி தொழில்நுட்பம், ஆழ்ந்த நிலத்தடி மற்றும் ஆழ்கடல், மேம்பட்ட பொருட்கள் உள்ளிட்ட அதிநவீன துறைகளில் சீனா முறையாக திட்டமிடுகிறது.

அடிப்படை ஆராய்ச்சியை மேற்கொள்ளும் வகையில், சீனா 77 தேசிய முக்கிய அறிவியல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளின் கட்டுமானத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. 60க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான அறிவியல் வசதிகள் கட்டியமைக்கப்பட்டு வருகின்றன அல்லது செயல்பட்டு வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author