புதிய சுற்று சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுதல்

சீன-அமெரிக்க பன்முகப் பொருளாதார உயர் நிலை கலந்தாய்வுக்கான சீனத் தரப்பு தலைவரும் துணைத் தலைமையமைச்சருமான ஹே லிஃபெங், அமெரிக்க நிதி துறை அமைச்சர் பெசண்ட் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளுடன்,  ஸ்வீடனில் புதிய சுற்று சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தையை உள்ளூர் நேரப்படி, ஜூலை 28 மற்றும் 29 ஆம் நாட்களில் தொடங்கினர். சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உறவு, ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கை முதலிய இரு தரப்புகள் பொதுவாக கவனம் செலுத்தும் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமாக கருத்துக்களைப் பரிமாறிகொண்டுள்ளனர். ஜெனீவாவில் சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தையின் பொது கருத்துகள், இலண்டன் பேச்சுவார்த்தையில் கட்டுகோப்பு உள்ளிட்டவை இரு தரப்பும் மீனாய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளன.

ஹே லிஃபெங் கூறுகையில்,

ஜூன் 5ஆம் நாளில், இரு நாடுகளின் தலைவர்களின் தொலைபேசி உரையாடலின் முக்கிய பொது கருத்துகளை வழிகாட்டியாகக் கொண்டு, ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிப்பது, சமாதானமாக பழகி, கூட்டு நலன் தரும் ஒத்துழைப்பு எனும் அடிப்படையில், தத்தமது நாட்டின் கவனத்துக்கு மதிப்பு அளித்து, பொது கருத்துகளை வலுப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவு பற்றிய சீனாவின் நிலைப்பாடு நிலையாக உள்ளது என்றார்.

 

அமெரிக்கத் தரப்பு கூறுகையில்,

 

நிலையான அமெரிக்க-சீன பொருருளாதார உறவு, இரு நாடுகளுக்கும் உலகப் பொருருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவுடன் இணைந்து, அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வு வழிமுறை மூலம், பொருருளாதார மற்றும் வர்த்தகத் துறையில் வேறுபாடுகளை நீக்கி, கூடுதல் பேச்சுவார்த்தை சாதனைகளை பெறவும், அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் உறுதிப்படுத்தவும் அமெரிக்கா பாடுபடும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author