இந்தியாவில் 2030-க்குள் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு பல மடங்கு உயரும் அபாயம்  

Estimated read time 1 min read

இந்தியாவில் வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் மிக தீவிரமாக அதிகரிக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் NCDIR நடத்திய ஆய்வு எச்சரித்துள்ளது.
IJMR இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகள், நாட்டின் சுகாதார நிலவரம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஆய்வின்படி, வடகிழக்கு மாநிலங்களில் புற்றுநோய் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
குறிப்பாக மிசோரம் மாநிலத்தின் ஆய்ஸ்வால் பகுதி அதிக பாதிப்புகளைக் கொண்டுள்ளது.
ஆச்சரியப்படும் விதமாக, புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத பெண்கள் மற்றும் இளைஞர்களிடமும் இப்பாதிப்பு அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு காற்று மாசுபாடு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் விறகு அடுப்புப் புகை, மற்றும் மறைமுகப் புகை (Second-hand smoke) ஆகியவை முக்கிய காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author