இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு, ஒருவழியாக மத்திய தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்கியுள்ளது.
பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு, இப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் கிடைத்துள்ளதால், ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (ஜனவரி 10) திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
1960-களில் மெட்ராஸில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தணிக்கை வாரியம் பரிந்துரைத்த 15-க்கும் மேற்பட்ட வெட்டுக்களை இயக்குநர் சுதா கொங்கரா ஏற்க மறுத்துவிட்டார்.
அந்த மாற்றங்கள் படத்தின் வரலாற்று உண்மைகளையும் கருப்பொருளையும் சிதைத்துவிடும் என்று அவர் வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள திருத்தக் குழுவிடம் (Revising Committee) மேல்முறையீடு செய்யப்பட்டது.
திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது பராசக்தி திரைப்படம்;
