நே ச்சா-2 என்ற சீன அனிமேஷன் திரைப்படம், பிப்ரவரி 13ம் நாள் வரை, 986.8 கோடி யுவான் மதிப்புள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வசூல் பெற்று, உலகளவில் அனிமேஷன் திரைப் பட வசூல் பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளது.
இந்த படத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை, 20 கோடியைத் தாண்டியுள்ளது. சீன திரைப்பட வரலாற்றில் பார்வையாளர்களின் எண்ணிக்கை, 20 கோடியைத் தாண்டிய முதல் திரைப்படம் இதுவாகும்.