சீனக்கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு
அமைச்சருமான வாங்யீ 10ஆம் நாள்
ஸ்விட்சர்லாந்தின்
பெல்லின்சோனா நகரில் அந்நாட்டின் கூட்டாட்சிக் கவுன்சில் உறுப்பினரும் வெளியுறவு
அமைச்சருமான இக்னாசியோ காசிஸுடன் இணைந்து 4ஆவது சீன-ஸ்விட்சர்லாந்து வெளியுறவு அமைச்சர்களின் நெடுநோக்கு
பேச்சுவார்த்தையை நடத்தினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், இவ்வாண்டு
இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். ஸ்விட்சர்லாந்துடன்
இணைந்து பேச்சுவார்த்தையில் ஊன்றி நின்று பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தி
ஒத்துழைப்புகளை மேலும் ஆழமாக்கச் சீனா விரும்புகிறது. பதற்றமான சர்வதேச நிலைமையில்
நெடுநோக்கு பரிமாற்றத்தை நெருக்கமாக்கி ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பு
முறையை உறுதியாகப் பேணிகாத்து உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்குக் கூட்டாகப்
பங்காற்ற விரும்புகிறது என்றார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்
முன்வைத்த உலக நிர்வாக முன்மொழிவு குறித்து காசிஸ் வரவேற்பு தெரிவித்து சீனாவுடன்
பலதரப்பு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி உலக அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளிக்க
விரும்புவதாகவும் தெரிவித்தார்.