சீன-ஆப்பிரிக்க மானுடப் பண்பாட்டுப் பரிமாற்ற ஆண்டு எனும் நடவடிக்கைக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 8ஆம் நாள், சீன-ஆப்பிரிக்க மானுடப் பண்பாட்டுப் பரிமாற்ற ஆண்டு எனும் நடவடிக்கைக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பினார்.

தன்னுடைய வாழ்த்துக் கடிதத்தில் அவர் கூறுகையில்,

நாகரிகப் பரிமாற்றம் மற்றும் கூட்டுப் பகிர்வானது மனித குல நாகரிக முன்னேற்றம், உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியை இடைவிடாமல் விரைவுபடுத்துவதற்கான உந்து ஆற்றலாக விளங்குகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டு காலத்தில் சீனா மற்றும் ஆப்பிரிக்காவின் நாகரிகங்கள், சீன-ஆப்பிரிக்க நடப்புறவு வரலாறு மற்றும் சிந்தனைகளின் ஊற்று மூலமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நடவடிக்கையை வாய்ப்பாகக் கொண்டு சீன மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 280 கோடி மக்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தி, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தைக் கூட்டாக கட்டியமைக்கும் பணியை விரைவுபடுத்துவதற்குப் புதிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author