சீன உழைப்பாளர் விருதுக்கான மாநாடு நடைபெறவுள்ளது

உலக உழைப்பாளர் தினக் கொண்டாட்ட மாநாடு மற்றும் சீன உழைப்பாளர் விருதுக்கான மாநாட்டை அனைத்துச் சீனத் தொழிற்சங்கச் சம்மேளனம் ஏப்ரல் 28ஆம் நாள் நடத்தவுள்ளது.

இந்தச் சம்மேளனத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், இவ்வாண்டு விருது வழங்கப்பட்ட முன்மாதிரி குழுக்கள் மற்றும் தனிநபர்களில், அடித்தட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை மூன்றில் இரு பங்குகளை வகித்துள்ளது. மேலும், விருது பெற்றவர்களில் புதிய எரியாற்றல் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் 19 தேசிய பொருளாதாரத் தொழில் துறைகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது. அரசு உடைமை முறை சாரா பொருளாதாரப் பிரிவுகள், சிறுபான்மை தேசிய இனங்கள் முதலியவற்றில், விருது பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த கட்டமைப்பு மேலும் சீராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author