பூடான் பிரதமரின் அழைப்பை ஏற்று அடுத்த வாரம் பிரதமர் நரேந்திர் மோடி அடுத்த வாரம் அந்நாட்டுக்கு செல்கிறார்.
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே Tshering Tobgay நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, உள்கட்டமைப்பு மேம்பாடு, இணைப்பு, எரிசக்தி, நீர்மின்சக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
பூட்டானின் வளர்ச்சியில் நம்பகமான மற்றும் மதிப்புமிக்க பங்காளியாக இந்தியாவின் பங்கிற்கு அந்நாட்டு பிரதமர் ஷேரிங் டோப்கே நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும் பூடானுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் ஷேரிங் டோப்கேபின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர அடுத்த வாரம் பூடான் செல்ல உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.