பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகம் வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
பிரதமர் இந்த ஆண்டில் மட்டுமே 5 வது முறையாக தமிழ்நாட்டிற்கு விசிட் அடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம் என்ற சூழலில், பிரதமர் மோடி நாடு முழுவதும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு, நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.