ஆளும் ஆட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் அமளி நடந்துவரும் நிலையில், இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஐந்து மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
ஆனால் இதில் பெரிய பொருளாதார சட்டங்கள் எதுவும் இல்லை.
மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை 19 அமர்வுகள் நடப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார்.
2024-25 ஆம் ஆண்டிற்கான யூனியன் பட்ஜெட் ஜூலை 23 ஆம் தேதி சமர்ப்பிக்கப்படும்.
இன்றைய அமர்வுக்காக ஐந்து மசோதாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் நிதி மசோதா, 2024 சேர்க்கப்படவில்லை.