ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் வன்முறை நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளார்.
இதன்படி, ஈரானுடன் வணிகத் தொடர்பில் இருக்கும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும்போது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரியை செலுத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் இதனை பதிவிட்டுள்ள டிரம்ப், “இந்த உத்தரவு இறுதியானது மற்றும் மாற்ற முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அதிரடி முடிவானது இந்தியா, சீனா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற ஈரானின் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளுக்கும், அமெரிக்காவுடனான அவர்களது உறவிற்கும் பெரும் சவாலாக அமையக்கூடும்.
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% அபராத வரி! இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நெருக்கடி
