சீனப் பாணியுடைய நவீனமயமாக்கம் குறித்து, சீனஅரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஆழமான விளக்கம் கொடுத்தார். சீனப் பாணியுடைய
நவீனமயமாக்கம், 5 சிறப்புகளைக் கொண்டுள்ளது. பெரும் மக்கள் தொகை கொண்ட
நவீனமயமாக்கம், அதன் முதலாவது சிறப்பு. அனைத்து மக்களும் கூட்டுச் செல்வம் பெறும்
நவீனமயமாக்கம், மக்களின் மீதான அன்பை வெளிக்காட்டும் 2வது சிறப்பாகும்.
பொருளாதார மற்றும் தார்மீக நாகரிகத்தின்
இசைவான வளர்ச்சி கொண்ட நவீனமயமாக்கம், தன்னிச்சை வளர்ச்சியை மறுக்கும் 3வது
சிறப்பாகும். மனிதர்-இயற்கை இணக்கமான சகவாழ்வு கொண்ட நவீனமயமாக்கம், மாசுபாட்டுக்குப்
பிறகுக் கட்டுப்பாடு என்ற வழிமுறையைக் கைவிட்ட 4வது சிறப்பாகும். அமைதியான
வளர்ச்சி பாதையில் நடைபோடும் நவீனமயமாக்கம், விரிவாக்கத் தருக்கத்தை மீறிய 5வது
சிறப்பாகும்.
நவீனமயமாக்கத்தை
நாட விரும்பும் எந்த நாடும், ஒற்றுமை ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வளர்ச்சி
சிந்தனையைப் பின்பற்றி, கூட்டுக் கட்டுமானம், பகிர்வு மற்றும் வெற்றி பாதையில்
நடைபோட வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவிக்கிறது.