இந்தியா “0 வரி” வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் நடந்து வருவதாகவும், விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்று தான் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் ஏப்ரல் 30 அன்று டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
முக்கிய வர்த்தக பங்காளிகளுக்கான கட்டண உயர்வுகள் குறித்து ஏப்ரல் 9 ஆம் தேதி டிரம்ப் அறிவித்த 90 நாள் இடைநிறுத்தத்திற்குள், இந்தியா மீது 26% வரி உட்பட, அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட இந்தியா நம்புகிறது.
இந்தியா “0 வரி கட்டணங்கள்” வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூறிய சில மணி நேரத்திலேயே அதை மறுத்துள்ளார் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்.
அவர் கூறுகையில், இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் சிக்கலானவை என்றும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் கூறினார்.
“இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இவை சிக்கலான பேச்சுவார்த்தைகள். எல்லாம் முடியும் வரை எதுவும் முடிவு செய்யப்படுவதில்லை. எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும்; அது இரு நாடுகளுக்கும் வேலை செய்ய வேண்டும்.
அது செய்யப்படும் வரை, அது குறித்த எந்தவொரு தீர்ப்பும் முன்கூட்டியே எடுக்கப்படாது” என்று ஜெய்சங்கர் கூறினார்.