குவைத் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல்; இந்தியத் தொழிலாளர் உயிரிழப்பு  

Estimated read time 0 min read

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம் இந்தப் போரில் இதுவரை உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
திங்கள்கிழமை அதிகாலை குவைத்தின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அங்கிருந்த ஒரு சேவை கட்டிடம் பலத்த சேதமடைந்தது.
இது குறித்து குவைத் மின்சாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில்,”குவைத் நாட்டின் மீது ஈரான் நடத்தியுள்ள இந்த அத்துமீறிய தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது,” எனத் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் சேதங்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

More From Author