வங்காளத்தேசத் தலைமையமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

வங்காளத்தேச மக்கள் குடியரசின் தலைமையமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 11ஆம் நாள் ஷேக் ஹசீனாக்குச் செய்தி அனுப்பினார்.


ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவுக்கும் வங்காளத்தேசத்துக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட கடந்த 49 ஆண்டுகளில், இரு நாடுகள் பரஸ்பர மதிப்பளித்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெற்று வருகின்றன. முக்கிய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் பரஸ்பர ஆதரவளிப்பது, இரு நாட்டு மக்களுக்கு உண்மையான நலன்களைக் கொண்டுள்ளன என்றார்.


இரு நாடுகளின் கூட்டு முயற்சியுடன், இரு நாடுகள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துக்களை மேலும் நடைமுறைப்படுத்தி, அரசியல் பரஸ்பர நம்பிக்கையை ஆழமாக்கி, வளர்ச்சி நெடுநோக்கு இணைப்பை வலுப்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாகவும் சீராகவும் கட்டியமைத்து, இரு நாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவைப் புதிய கட்டத்துக்குக் கொண்டு செல்வதை முன்னேற்ற வேண்டும் என்று சீனா விருப்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

You May Also Like

More From Author