ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் உள்ள கோர்டோபா மாகாணத்தில், அடமுஸ் (Adamuz) நகருக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஸ்பெயின் அரசு ஊடகமான RTVE தெரிவித்துள்ளது.
மாலகாவிலிருந்து மேட்ரிட் நோக்கி சென்ற ‘இரியோ’ (Iryo) நிறுவனத்தின் அதிவேக ரயிலும், மேட்ரிட்டிலிருந்து ஹுவெல்வா நோக்கிச் சென்ற ‘ரென்பே’ (Renfe) நிறுவனத்தின் ரயிலும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இரியோ ரயில் திடீரென தடம் புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்திற்கு சென்றதே இந்த விபத்திற்கு முதற்கட்ட காரணமாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ரென்பே ரயிலின் ஓட்டுநரும் உயிரிழந்துள்ளார்.
ஸ்பெயினில் நேருக்கு நேர் மோதிய இரண்டு அதிவேக ரயில்கள்: 21 பேர் பலி
