நவீனமயமாக்கலை முன்னெடுக்கும் போக்கில் சீனா “ஐந்து துறைகளை ஒருங்கிணைத்தல்” (the Five-Sphere Integrated Plan)என்ற முக்கியமான நெடுநோக்கு திட்டத்தை வகுத்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக ஆளும் கட்சியால் உருவாக்கப்பட்ட திட்டம் இதுவாகும். இது குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டில் இந்தத் திட்டத்தை முன்வைத்தார். பொருளாதாரம், அரசியல், பண்பாடு, சமூகம் மற்றும் உயிரின வாழ்க்கை ஆகிய 5 துறைகளை ஒருங்கிணைக்கும் இந்த திட்டத்தின்படி, பொருளாதார வளர்ச்சியை மட்டும் சார்ந்திருக்கிற முறையை மாற்றி, நவீனமயமாக்கல் கட்டுமானத்தை ஒட்டுமொத்த பார்வையில் ஒருங்கிணைப்பது, இத்திட்டத்தின் தனிச்சிறப்பாகும்.
ஐந்து துறைகளை ஒருங்கிணைத்தல் என்ற திட்டம், ஒரு மரமாக வர்ணிக்கப்பட்டு கூறலாம். பொருளாதாரக் கட்டுமானம், மண்ணில் ஊன்றி சத்துக்களை எடுத்துகொள்ளக் கூடிய மத்தின் வேர் போன்றதாகும். தொழில் மற்றும் அறிவியல் தொழில் நுட்பம் முதலியவை மூலம் வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்குவதில் செயல்பாடுகின்றது. அரசியல் கட்டுமானம், மரக் கட்டை மாதிரியாக அமைப்பு முறை மற்றும் சட்ட அமைப்புக்கு இணங்க வளர்ச்சியின் திசையை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. பண்பாட்டு கட்டுமானம், மரத்தின் கிளைகள் மற்றும் இலைகள் போல, பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் சமூகத்தின் விழுமியங்களின் உருவாக்கம் மூலம் எழுச்சி ஆற்றலைத் திரண்டி, உயிராற்றல் வெளியிடுகின்றது. சமூக கட்டுமானமானது, கனி போல கல்வி, மருத்துவச் சிகிச்சை முதலிய வாழ்வாதாரத் துறையில் ஈட்டிய சாதனைகளை பொது மக்களுக்கு திரும்பி கொடுத்து வளர்ச்சி நலன்களை கூட்டாக அனுபவிப்பதைக் குறிக்கிறது. கடைசியாக, உயிரின வாழ்க்கை சார் கட்டுமானம், வேர்களை வளர்க்கும் மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் “மண்” போன்று உள்ளது.
