அடுத்தாண்டு தொடக்கத்தில் பொதுத்தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக, தாய்லாந்தின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், 2023ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்து கூட்டணி ஆட்சி அமைந்தது.
அரசியல் குழப்பங்களால், கடந்த செப்டம்பரில் அனுடின் சார்ன்விரகுல் பிரதமரானார். அப்போதே விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி, அடுத்தாண்டு துவக்கத்தில் தேர்தல் நடத்தும் வகையில், நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அந்நாட்டு மன்னர் வஜிரலோங்கோன் ஒப்புதல் அளித்துள்ளார். வரும் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி மாத துவக்கத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
