2025ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில், சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 133ஐ எட்டி, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 14.1 விழுக்காடு அதிகமாகும். பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் தொகை 46 ஆயிரத்து 734 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 13.4 விழுக்காடு குறைந்தது.
தரவுகளின்படி, தயாரிப்புத் துறை, சேவைத் துறை, உயர் தொழில் நுட்பத் தொழில் துறை ஆகிய துறைகளில் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் தொகை முறையே 12104 கோடி, 33625 கோடி, 13736 கோடி யுவானை எட்டியது.
மேலும், சீனாவில் ஆசியான் பிரதேசத்தின் முதலீட்டுத் தொகை 1.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகள் சீனாவிலான முதலீட்டுத் தொகை முறையே 63.9, 53.7 மற்றும் 19.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.