தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், மழை வெளுத்து வாங்குகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
மேலும், குண்டும், குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. , மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரான பிறகு, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர்.