அண்மையில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வில், விரிவான சீர்திருத்தங்களை மேலும் ஆழமாக்குவது மற்றும் நவீனமயமாக்கலை முன்னெடுப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஜுலை 21ஆம் நாள் வெளியிடப்பட்ட தீர்மான ஆவணத்தில், சீர்திருத்தங்களை ஆழமாக்குவது மற்றும் நவீனமயமாக்கலை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் மற்றும் ஒட்டுமொத்த கோரிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில், உயர்நிலை சந்தைப் பொருளாதார அமைப்பு முறையை உருவாக்குவது, பொருளாதாரத்தின் தரமான வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான அமைப்பு முறையை முழுமைப்படுத்துவது, விரிவான புத்தாக்கங்களை ஆதரிப்பதற்கான அமைப்பை உருவாக்குவது, ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் நிர்வாக அமைப்பு முறையை முழுமைப்படுத்துவது, நகரப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் இடையே ஒருங்கிணைந்த வளர்ச்சி அமைப்பு முறையை முழுமைப்படுத்துவது, உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பு அமைப்பு முறையை முழுமைப்படுத்துவது, முழு செயல்முறையிலும் மக்களாட்சி அமைப்பு முறையை முழுமைப்படுத்துவது, சட்டப்படி ஆட்சி புரிவதற்கான அமைப்பு முறையை முழுமைப்படுத்துவது, பண்பாட்டு அமைப்பு முறையின் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது, மக்கள் வாழ்வாதரவு அமைப்பு முறையை முழுமைப்படுத்துவது, சூழலியல் நாகரிக அமைப்பு முறையின் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது, நாட்டின் பாதுகாப்பு அமைப்பு முறை மற்றும் திறனின் நவீனமயமாக்கலை முன்னெடுப்பது, தேசிய தற்காப்பு மற்றும் ராணுவப் படைச் சீர்திருத்தத்தை தொடர்ச்சியாக ஆழமாக்குவது, சீர்திருத்தங்களை ஆழமாக்குவது மற்றும் நவீனமயமாக்கலை முன்னெடுப்பதில் கட்சியின் தலைமைத் திறனை உயர்த்துவது ஆகிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.