இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாட்டின் தலைநகரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிநவீன தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக டெல்லி காவல்துறை அதிகாரிகள், குற்றவாளிகளை உடனுக்குடன் கண்டறியும் ‘ஏஐ (AI) திறன்பெற்ற ஸ்மார்ட் கண்ணாடிகளை’ அணிந்து கர்த்தவ்யா பாதையில் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளனர்.
‘அஸ்னாலென்ஸ்’ (AznaLens) என்ற இந்தியத் தொழில் நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த நவீனக் கண்ணாடிகள், முக அங்கீகார மென்பொருள் (Facial Recognition System – FRS) மற்றும் வெப்ப இமேஜிங் (Thermal Imaging) வசதியைக் கொண்டுள்ளன.
குடியரசு தின பாதுகாப்பு: குற்றவாளிகளைக் கண்டறிய AI கண்ணாடிகளை பயன்படுத்தும் டெல்லி காவல்துறை
