பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘மருமகள்’ போன்ற பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த நடிகர் ரவிச்சந்திரன், தற்போது பா.ஜ.க.வுக்கு ஆதரவாகச் சமூக வலைத்தளங்களில் அரசியல் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்குத் தற்போது பா.ஜ.க.வில் மாநிலப் பிரச்சார அணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடாமல், கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லும் பணியை இவர் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ரவிச்சந்திரன் இதற்கு முன்பு பேசிய சர்ச்சைப் பேச்சுக்களால் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றவர். கடந்த சில மாதங்களுக்கு முன், சனாதனம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசிய கருத்தைக் கண்டித்துப் பேசிய ரவிச்சந்திரன், “கமல் கழுத்தை அறுத்து விடுவேன்” என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சர்ச்சைக்குரிய பேச்சுக்குப் பிறகும், அவருக்குப் பா.ஜ.க.வில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
