சென்னையில் உள்ள டீ கடைகளில் இன்று (செப்டம்பர் 1) முதல் டீ, காபி உள்ளிட்ட பல பானங்களின் விலை அதிகரிக்கிறது.
சென்னையில் இயங்கி வரும் 1,000-க்கும் அதிகமான டீ கடைகள், மூன்று ஆண்டுகளுக்குப் பின் விலை மாற்றத்தை அறிவித்துள்ளன.
இதன்படி, நேற்று வரை ரூ.12-க்கு விற்கப்பட்ட டீ, இன்று முதல் ரூ.3 அதிகரித்து ரூ.15 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, காபி விலை ரூ.5 உயர்ந்து, ரூ.20 ஆக உள்ளது. பார்சல் டீ, காபி விலைகளும் ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளன.
ராகி மால்ட், ஹார்லிக்ஸ், பூஸ்ட் உள்ளிட்ட பானங்களின் விலையும் உயர்ந்துள்ளது.
ஆனால் பால் மற்றும் லெமன் டீ விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு; இதுதான் காரணமா?
