இனி WiFi வேகம் அதிரும்! இந்தியாவில் WiFi 7 தொழில்நுட்பத்திற்கு வழிவகுக்கும் அறிவிப்பு  

Estimated read time 1 min read

இந்தியாவில் அதிவேக இணைய சேவையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, 5925-6425 MHz வரையிலான 500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை உரிமம் இன்றி பயன்படுத்த மத்திய தொலைத்தொடர்பு துறை அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் பொதுமக்களும் நிறுவனங்களும் இந்த அலைக்கற்றையை WiFi சேவைகளுக்காக எவ்வித கட்டணமும் உரிமமும் இன்றி பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நியூஸ் 18 செய்தியின்படி, தற்போது நாம் பயன்படுத்தும் வைஃபை வேகத்தை விடப் பல மடங்கு அதிக வேகத்தைத் தரக்கூடிய ‘வைஃபை 7’ (Wi-Fi 7) தொழில்நுட்பம் செயல்பட இந்த 6 GHz அலைக்கற்றை மிகவும் அவசியமானது.

Please follow and like us:

You May Also Like

More From Author