
சமூக ஊடகங்களில் @whitemask2055 என்ற பெயரில் பகிரப்பட்டு வரும் வீடியோக்கள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அந்த நபர் தான் 2055 ஆம் ஆண்டிற்கு காலப்பயணம் (Time Travel) செய்துவிட்டதாகவும், உலகில் எஞ்சியிருக்கும் ஒரே மனிதன் தான் மட்டுமே என்றும் கூறுகிறார்.
<a href=”http://
“>
அவர் வெளியிட்ட வீடியோக்களில் பாரிஸின் ஈபிள் கோபுரம், லூவ்ரே அருங்காட்சியகம் மற்றும் பெரிய மருத்துவமனைகள் மக்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மேலும், பிளேஸ்டேஷன் 7 போன்ற எதிர்கால கருவிகளும் அந்த வீடியோக்களில் காட்டப்படுவது நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இருப்பினும், இந்த வீடியோக்களில் உள்ள பல முரண்பாடுகளை இணையவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மனிதர்களே இல்லாத உலகில் சாலைகளும் அருங்காட்சியகங்களும் எப்படி இவ்வளவு சுத்தமாக இருக்கின்றன என்றும், பராமரிப்பு ஆட்கள் இல்லாமல் மின்சாரம் எப்படி கிடைக்கிறது என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
மேலும், ஒரு நகரத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அவர் எப்படி பயணம் செய்கிறார் என்பதும் மர்மமாகவே உள்ளது. இதனால் இது உண்மையான காலப்பயணம் அல்ல, மாறாக மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட ஒரு புனைவு என்ற கருத்து வலுவாக உள்ளது.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், இது செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது பிளெண்டர் (Blender) போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உயர்தர 3D கிராபிக்ஸ் காட்சிகளாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
2022 இல் இந்த வீடியோக்கள் தொடங்கப்பட்டபோது AI இவ்வளவு வளர்ச்சி அடையவில்லை என்றாலும், இது ஒரு வீடியோ கேமின் காட்சிகளாக இருக்கவும் வாய்ப்புள்ளது.
இது ஒரு திறமையான எடிட்டிங் வேலையாக இருந்தாலும், எதிர்காலம் குறித்த ஒருவித அச்சத்தையும் ஆர்வத்தையும் மக்களிடையே விதைத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

(@whitemask2055)