2025இல் சீனாவின் வெளிநாட்டு நேரடி முதலீடு முந்தைய ஆண்டை விட 7.1 சதவீதம் அதிகரிப்பு

2025ஆம் ஆண்டின் இறுதி வரை, 190 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களை சீனா நிறுவியுள்ளது.

2025ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு நேரடி முதலீடு 17 ஆயிரத்து 438 கோடி அமெரிக்க டாலரை எட்டி, முந்தைய ஆண்டை விட 7.1 சதவீதம் அதிகரித்து, உலகின் முன்னணியில் உள்ளது என்று சீன வணிக அமைச்சகம் 22ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் சீன நிறுவனங்கள் தங்கள் சமூகப் பொறுப்புகளை ஆக்கப்பூர்வமாக நிறைவேற்றி, ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. வெளிநாடுகளில் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஏராளமான வசதிகளைக் கட்டியமைத்த இந்நிறுவனங்கள் பரந்த அளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

2026ஆம் ஆண்டில், சீன நிறுவனங்கள் உலகப் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சிக்கு மேலதிக பங்களிப்பை வழங்கும் என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹெ யோங்சியான் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author