கியூபாவின் கட்சி மற்றும் அரசின் சிறப்புத் தூதரின் சீனப் பயணம் பற்றிய அறிமுகம்

கியூபாவின் கட்சி மற்றும் அரசின் சிறப்புத் தூதரின் சீனப் பயணம் பற்றிய அறிமுகம்

கியூபாவின் கட்சி மற்றும் அரசின் சிறப்புத் தூதரும், கியூபா கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் விரைவில் சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் நவம்பர் 9ஆம் நாள் கூறுகையில், சீனாவும் கியூபாவும் நட்பார்ந்த நண்பராகும். இரு நாடுகளுக்கிடையிலான உயர்நிலை பரஸ்பர நம்பிக்கையை, ஜார்ஜ் ரோட்ரிக்ஸின் சீனப் பயணம் வெளிப்படுத்தியுள்ளது என்றார். மேலும், அவரது இப்பயணத்துக்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. சீன-கியூபா உறவு மற்றும் பொது அக்கறை கொண்ட விவகாரங்கள் குறித்து, கியூபா தரப்புடன் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறி, இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்தக் கருத்துக்களை மேலும் செயல்படுத்தி, பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, சீன-கியூபா பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தைத் தொடர்ச்சியாக முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author