யூடியூப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) நீல் மோகன், 2026 ஆம் ஆண்டிற்கான யூடியூப்பின் புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
இதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கிரியேட்டர்கள் இனி தங்கள் சொந்த உருவத்தை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் ஷார்ட்ஸ் வீடியோக்களை உருவாக்க முடியும்.
அதாவது, நீங்கள் கேமரா முன்னால் நிற்காமலேயே, உங்கள் தோற்றத்தைக் கொண்ட ஒரு ஏஐ உருவம் உங்களுக்காக வீடியோவில் தோன்றும்.
சமீபத்தில் ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்திய சோரா ஆப்பிற்குப் போட்டியாக இந்த வசதி பார்க்கப்படுகிறது.
சோராவில் டெக்ஸ்ட் கொடுத்தால் வீடியோ உருவாகும் வசதி இருப்பது போல, யூடியூப் தனது பயனர்களுக்குத் தங்களின் உருவத்திலேயே வீடியோக்களை உருவாக்க அனுமதி அளிக்கிறது.
யூடியூப் ஷார்ட்ஸில் ஏஐ புரட்சி: உங்களைப் போலவே வீடியோக்களை உருவாக்கலாம்!
