அக்டோபரில் சீனாவின் நுகர்வோர் விலை குறியீடு, செப்டம்பரில் இருந்ததற்குச் சமம். இக்குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.7 விழுக்காடு அதிகரித்தது. இதன் அதிகரிப்பு விகிதம், செப்டம்பரில் இருந்ததை விட 0.2 விழுக்காட்டு புள்ளிகள் குறைந்துள்ளது. உணவு மற்றும் எரியாற்றல் விலையைத் தவிர்த்த முக்கிய சி.பி.ஐ கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.8 விழுக்காடு அதிகமாகும். இதன் அதிகரிப்பு விகிதம் செப்டம்பரில் இருந்ததை விட 0.2 விழுக்காட்டு புள்ளிகள் குறைந்தது. பி.பி.ஐ குறியீடு, செப்டம்பரில் இருந்ததை விட 0.7 விழுக்காடு அதிகரித்தது. இதன் அதிகரிப்பு விகிதம் செப்டம்பரில் இருந்ததை விட 0.5 விழுக்காட்டு புள்ளிகள் குறைந்தது. இக்குறியீடு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.7 விழுக்காடு அதிகரித்தது. இதன் அதிகரிப்பு விகிதம் செப்டம்பரில் இருந்ததை விட 0.7 விழுக்காட்டு புள்ளிகள் அதிகரித்தது.
