2024ஆம் ஆண்டு சீன இணைய நாகரிக மாநாடு ஆகஸ்ட் 28ஆம் நாள் செங்டு நகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துறை அமைச்சருமான லீ ஃபுலேய் அதில் பங்கேற்று முக்கிய உரையாற்றினார்.
யுகத்தின் எழுச்சியை வெளிகொணர்ந்து, இணைய நாகரிகத்தைக் கூட்டாகக் கட்டியமைப்பது இம்மாநாட்டின் தலைப்பாகும்.
இணைய நாகரிக கட்டுமானத்தை வலுப்படுத்துவது, தகவல் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சிக்குப் பூர்த்தி செய்யும் அத்தியாவசியப் பணி ஆகும்.
தவிரவும், பண்பாட்டு வல்லரசு மற்றும் இணைய வல்லரசை உருவாக்குவதற்கான பொறுப்பும் ஆகும் என்று இம்மாநாட்டில் பங்கேற்றவர்களில் சிலர் கருத்து தெரிவித்தனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வில் “இரு நாகரிகங்கள்” நல்லிணக்கமான நவீனமயமாக்கத்தைக் கட்டியமைப்பது குறித்து, பண்பாட்டு அமைப்பு முறைச் சீர்திருத்தத்தை ஆழமாக்குவதென்ற முக்கிய கடமை முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய தொடக்கப் புள்ளியில் பண்பாட்டுச் சீர்திருத்த வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும், இணைய நாகரிக கட்டுமானத்தை வலுப்படுத்துவதற்கும் இது அடிப்படை வழிமுறையை வழங்கியுள்ளது.