சீர்திருத்தத்தின் பன்முக ஆழமாக்கத்தில் ஊன்றி நிற்பது குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கிய பேச்சுகள் என்ற புத்தகத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது பகுதி அண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் ஆவண வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டது.
2012ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2018ஆம் ஆண்டு டிசம்பர் வரை இந்த தலைப்பில் ஷிச்சின்பிங் வழங்கிய 73 முக்கிய கட்டுரைகள் முதலாவது பகுதியில் அடங்கும். 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் வரை ஷிச்சின்பிங்கின் 92 முக்கிய கட்டுரைகள் 2ஆவது பகுதியில் அடங்கும். அவற்றில் சில கட்டுரைகள் முதன்முறையாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சீர்திருத்தத்தைத் தொடர்ந்து பன்முகமாக ஆழமாக்குவதற்கும் சீனப் பாணி நவீனமயமாக்கல் மூலம், வல்லரசு கட்டுமானம் மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சியை முன்னேற்றுவதற்கும் ஷிச்சின்பிங்கின் புதிய சிந்தனைகள் பெரும் வழிகாட்டல் முக்கியத்துவம் வாய்ந்துள்ளன.